உலகையே அதிர வைத்த பாம்பு விசாரணை : கடும் எதிர்ப்பு !!

share on:
Classic

கைதி ஒருவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க, அவர் மீது உயிருள்ள பாம்பை நெளியவிட்ட இந்தோனேஷிய போலீசார் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

பாம்பு விசாரணை :
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் இந்தோனேசிய போலீசார் ஒரு கைதியை விசாரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாதாரணமாக அல்ல உயிருள்ள பாம்பு அவர் மீது மேய விட்டு பின்னர் விசாரிக்கின்றனர் போலீசார். மொபைல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அந்த கைதி தன் உடம்பின் மீது பாம்பு ஊர்வதால் பயத்தில் நடுங்கி நெளிகிறார். அச்சத்தில் கண்களை மூடிய நிலையிலேயே பேசும் அவரிடம் போலீஸ்காரர் ஒருவர் "கண்ணை திற. இல்லையென்றால் பாம்பை உன் கால் சட்டைக்குள் விட்டு விடுவோம் " என்று மிரட்டுகிறார்.

 

மன்னிப்பு :
மனித நேய போராளிகள் பலரும் இந்த கொடுமையான விசாரணைக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். எதிர்ப்பு வலுப்பெற்றதை அடுத்து, இந்தோனேஷிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அதற்காக தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றி பேசிய அவர் "இது அந்த போலீஸ்காரரின் தனிப்பட்ட செயல். அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அது விஷம் இல்லாத பாம்பு தான். உண்மையை வெளிக்கொண்டு வரவே அப்படி செய்துள்ளனர். எனினும் இது சரியான வழி அல்ல" என்று கூறியுள்ளார். ஆனால் இது ஒன்றும் அங்கு புதிதல்ல. ஏற்கனவே இதே போல் பல கைதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மனித உரிமை மீறலான இந்த விசாரணை இனி நடைபெறவே கூடாது என்று பலரும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

youtube