உலக அளவிலான யோகாசனப் போட்டியில் முதலிடம் பிடித்த சீர்காழி மாணவி

share on:
சீர்காழி, யோகாசனம், Sirkali, Yoga
Classic

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான யோகாசனப் போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் - சீதா தம்பதியரின் மகள் சுபானு. சீர்காழியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்றுவரும் அவர், தென் அமெரிக்காவில் உள்ள ரோசாரியோவில் நடைபெற்ற உலக அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில், 12 மற்றும் 15 வயதிற்கான பிரிவில் பங்கேற்ற மாணவி சுபானு, போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவி சுபானுவுக்கும், அவரது பெற்றோருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

News Counter: 
100
Loading...

vijay