உலகின் பழமைவாய்ந்த தேவாலயத்தில் பெரும் தீவிபத்து : முக்கிய கட்டமைப்பு பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல்..

share on:
Classic

பாரிஸீன் பழமைவாய்ந்த நோட்ரே - டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு அதன் முக்கிய அமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான, 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே - டேம் தேவாலயம் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பாரீஸின் பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான அங்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி மக்கள் சென்று பார்வையிடுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த புகழ்பெற்ற தேவாலயத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லையென்றாலும், அங்கு தற்போது பரமாரிப்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன. கொழுந்துவிட்ட எரிந்த தீயால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. அதனை பார்த்த பாரீஸ் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடும் இந்த தேவாலயத்தில் மேற்கூரைகள் தீப்பிழம்புகளால் சூழ்ந்தன. 

இதனிடையே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் சக தோழர்களை போலவே தனக்கு இந்த தீவிபத்து மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்தார். இது நாட்டின் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். 

இது குறித்து பல்வேறு உலக தலைவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கல் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடையாளம் எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது குறித்து கூறிய போது “ இந்த தீவிபத்தை பார்க்க பயங்கரமாக இருக்கிறது. தீயை அணைக்க பறக்கும் தண்ணீர் டான்கர்களை பயன்படுத்துங்கள், விரைவில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து கூறினார். அதில் அவர் “ பயங்கரமான தீயை எதிர்க்கொண்டிருக்கும் பிரான்ஸ் மக்களுடன் என் எண்ணங்கள் இருக்கும்” என்று தெரிவித்தார்.

எனினும் தீயை அணைக்க 400 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டனர் எனவும், நோட்ரே - டெம் தேவாலயத்தின் பாதுகாக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

News Counter: 
100
Loading...

Ramya