உலக வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவில் நடத்த மத்திய அரசு திட்டம்..!!

share on:
Classic

உலக வர்த்தக அமைப்பின் அங்கம் வகிக்கும் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் இந்தியாவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகள் வர்த்தக பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில். இந்தியாவும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. வரும் மே மாதம் இந்த கூட்டத்தை நடத்தவும், 20 டபிள்யூடிஓ உறுப்பு நாடுகளின் அமைச்சர்களை அழைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா அதிக வரி விதித்ததை தொடர்ந்து சீனாவுடன் வர்த்தக போர் மூண்டுள்ளது இது சம்மந்தமாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தை விட 2020 ஆம் ஆண்டு மிகவும் குறைவாக இருக்கும் என டபிள்யூடிஓ அமைப்பு எச்சரித்திருந்தது.

பொருளாதாரத்தால் ஏற்படுகின்ற வர்த்தக போர்கள் நடைபெறுவதை தொடர்ந்து சர்வதேச வர்த்தகத்துக்கு டபிள்யூடிஓ அமைப்பு அவசியம் தேவை என வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் நடந்த அமைச்சர்வைக் கூட்டம் பாதியில் முடிவடைந்தது அதன் பின் கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் 50 நாடுகள் பங்கேற்றன.

அந்தக் கூட்டத்தில் டபிள்யூடிஓ விதிமுறைகளால் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியது. உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கோரியிருந்த்து குறிப்பிடத்தக்கது.   

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan