வாயை பிளக்கவைத்து மலைப்பில் ஆழ்த்துகிறது இந்த ஷூவின் விலை... என்னனு பாருங்க...

share on:
Classic

ஆடை, அணிகலன்கள் தேர்ந்தெடுத்தலுக்கு கைத்தேர்ந்தவர்கள் பெண்கள்தான் என்றாலும் ஆண்களும் இதில் சலைத்தவர்கள் இல்லை என்ற பேச்சும் வழக்கத்தில்தான் உள்ளது. ஆனால், பெண்களுக்காக உள்ள அணிகலன்களை விட ஆண்களுக்கு உள்ளவை என்று பார்த்தால் அது குறைவே. அதுப்போல,  உலகத்திலேயெ அதிக விலைக்கொண்ட காலணி ஒன்றை தயாரித்துள்ளது அரபு நாடான துபாயைச் சேர்ந்த ஜாடா துபாய் எனும் நிறுவனம்.

பெண்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள அக்மார்க் தங்கத்தால் ஆனது இந்த ஷூ. இதன் அசல் விலை 17மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய ரூபாயின் மதிப்புப் படி ரூ.123கோடி ஆகும். இது முழுக்க முழுக்க தங்கத்தாலும் 15 காரட் வைரக்கற்களாலும் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகமே அசந்துப்பார்க்கும் அளவுக்கு உள்ள துபாயின் பிரமாண்ட 7 ஸ்டார் ஹோட்டலான புர்ஜ் அரபில் கடந்த சில வாரத்துக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், டெபி வின்கம் என்பவர் தான் உலகிலேயே அதிக விலையுயர்ந்த காலணியை பயன்படுத்தியுள்ளார் என தகவல். அதன் விலை 15 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்.

News Counter: 
100
Loading...

janani