உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது தெரியுமா..?

share on:
Classic

அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடெரா ஸ்டேடியம் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழப்போகிறது.

63 ஏக்கர் பரப்பளவில் தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் தான். இதில் கிட்டத்தட்ட 1.10 லட்சம் மக்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து போட்டிகளைக் காண முடியும். ஆனால் இதற்குமுன் உலகின் பெரிய மைதானமான மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 90,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.

"இந்தியாவின் கனவுத் திட்டம்" 

சமீபத்தில் குஜராத் கிரிக்கெட் சங்கத்துணைத் தலைவர் பரிமல் நாத்வானியால் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னேற்றம் குறித்த ஒரு படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில்   வெளியிட்டார். அதில் மெல்போர்னை விட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் அமைந்து உள்ள மொடெரா ஸ்டேடியம் தான் என்றும், இந்த திட்டம் முழுமை அடைந்தவுடன் குஜராத் கிரிக்கெட் சங்கம் முழு இந்தியாவின் பெருமை ஆகிவிடும் எனவும், அதுமட்டும் அல்லாமல் இந்த கனவுத் திட்டம் நம் நாட்டிற்கே பெருமை என்றும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.

 

மொடெரா ஸ்டேடியம் பற்றி நீங்கள் அறிய வேண்டிய சிறப்பம்சங்கள்..!!

2018 ஜனவரி மாதம் ஸ்டேடியத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையாகும். இந்த சிந்தனைக்கு குஜராத் கிரிக்கெட் அசோசியேஷனால் இப்போது நிஜ வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.  

லார்சன் & டூர்போ (எல்&டி) நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. மேலும், புகழ்பெற்ற கட்டிடக்கலை நிறுவனமான M/s-க்கு ஸ்டேடியம் வடிவமைப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. உலகிலேயே தற்போதைய மிகப்பெரிய மைதானமான மெல்பேர்ன் ஸ்டேடியத்தை வடிவமைப்பதில் பெருமளவில் M/s நிறுவனம் இருந்துள்ளது.

63 ஏக்கர் பரப்பளவிலான மொடெரா மைதானம் சுமார் 1.10 இலட்சம் மக்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. தற்போது மெல்போர்ன் ஸ்டேடியத்தின் திறன் 90,000 இருக்கைகள் ஆகும்.

ஸ்டேடியத்தை கட்டும் மொத்த செலவு சுமார் ரூ. 700 கோடி ஆகும்.

ஸ்டேடியத்தில் 4 ஆடை அறைகள் மற்றும் 50 அறைகள், 76 கூடுதல் அறைகள், ஒரு பெரிய நீச்சல் குளம் ஆகியவற்றோடு இணைந்த ஒரு கிளப் வீடு உள்ளிட்டவையும் இருக்கும்.

வளாகத்தினுள் கிரிக்கெட் பயிற்சி அகாடமி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தின் பார்க்கிங் வசதியானது பிரம்மிக்கத்தக்க வகையில் உள்ளது. அதில் 3,000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் இடம்பெற்றுள்ளது. 

முந்தைய மொடெரா ஸ்டேடியத்தில் 54,000 மக்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து போட்டிகளைக் காணும் வசதி இருந்தது. இது 2016-ல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் மூலம் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

aravind