மாயமான AN-32 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு..!

share on:
Classic

அசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படையின் விமானத்தின் பாகங்கள் 8 நாட்களுக்குப் பிறகு அருணாசல் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு புறப்பட்ட AN - 32 ரக ராணுவ விமானம், பறக்கத் தொடங்கிய 33 நிமிடங்களில் மாயமானது. இதனால் விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை கேள்விக்குறியானது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அதிநவீன விமானங்களும், விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.

கடும் மழை, சவாலான காலநிலை என பல இடர்பாடுகளை சந்தித்த தேடுதல் குழு, 8 நாட்களுக்குப் பிறகு விமானத்தின் பாகங்களை கண்டறிந்துள்ளது. இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்தியில், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் லிப்போ என்ற இடத்திற்கு 16 கிலோ மீட்டர் வடக்கே உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற பாகங்களையும், விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan