சின்ன கல்லு பெத்த லாபம், குறைந்த விலையில் பெரிய திரைகொண்டு அசத்தும் சியோமியின் புதிய ரக டிவிக்கள்

share on:
Classic

இந்தியாவில் தனது புதிய தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது சீன நிறுவனமான Xiaomi. இதன் மூலம் இனி குறைந்த செலவில் '55 இன்ச்' பெரிய திரைகளில் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.

தி பிக் பீக்சர்
இதுவரை மொபைல் உலகில் தனக்கான தனி முத்திரையை பதித்த Xiaomi நிறுவனம் தற்போது இந்தியாவில் அதின் வணிகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. அதனடிப்படையில் தனது புதிய 43 மற்றும் 55 இன்ச் தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

Image result for mi soundbar

தன் அறிமுக  நிகழ்ச்சி "தி பிக் பீக்சர்" என்ற பெயரில் இன்று நடந்தது. கடந்த வாரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கேலியாக குறிப்பிட்ட Mi நிறுவனம், தொலைக்காட்சியோடு கூட புதிய சவுண்ட் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. 

பெரிய தொடு திரையுடன்  
ஆன்ட்ராய்ட் மூலம் இயங்கும் இந்த டிவிக்கள் ஒருவரது குரல் மூலமே இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Image result for mi tv 4x

Xiaomi டிவிகளின் விலை 12,500 இல் தொடங்கி 50,000 வரை நீள்கிறது. புதிய 43 இன்ச் தொலைக்காட்சியின் விலை 22,999 ரூபாய்க்கும், 55 இன்ச் தொலைக்காட்சியின் விலை 39,999ரூபாய்க்கும், 55 இன்ச் டிவியிலேயே '4X Pro' என்று அழைக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்கள் உள்ள தொலைக்காட்சி 49,999 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் சிறந்த ஒலி அமைப்பை கொண்ட 'சவுண்ட் பாரின்' விலை வெறும் 4,999 தன் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

aravind