டெஸ்ட் கிரிக்கெட்டில் 82 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்

share on:
யாசிர் ஷா, பாகிஸ்தான், டெஸ்ட் கிரிக்கெட், Test Cricket, Yasir Shah
Classic

பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தி 82 ஆண்டுக்கால சாதனையை தகர்த்துள்ளார்.

நியூசிலாந்த்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஐக்கி அரபு நாடுகளில் நடைப்பெற்று வருகிறது. இந்த தெடாரில் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைப்பெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா குறைந்த போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அவர் இந்த சாதனையை 33வது டெஸ்ட் போட்டியில் சாதித்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் யாசிர் சர்பாஸ்டு 36 போட்டிகளில் 200 விக்கெட்டை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 

நியூசிலாந்திற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தெடாரில் யாசிர் ஷா இதுவரை 27 விக்கெட்களை சாய்த்துள்ளார். அதிவேகமாக  50 விக்கெட்களை வீழ்த்திய வீரரும் இவர் தான்(9 டெஸ்ட்). 100 விக்கெட்களை குறைந்த போட்டிகளில்  (17 டெஸ்ட்) வீழ்த்தியவர்களில் 2வது இடத்தில் இவர் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் லோமன் 16 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind