வரும் நிதியாண்டில் ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

share on:
Classic

வரும் நிதியாண்டில் ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வேளாண்துறைக்கு 10,550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்திற்கு 621 கோடியே 59 லட்சம் ரூபாயும், 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு ஆயிரத்து 361 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் பயிர்க்கடனை திருப்பி செலுத்தி விட்டால் அதற்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயிர்கடனுக்கான வட்டி தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு 100 கோடி ரூபாயும் தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளில் மேம்பாட்டிற்கு 79 கோடியே 73 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya