எடியூரப்பாவின் டைரி விவகாரத்தை பிரசார ஆயுதமாக்கும் காங்கிரஸ்..!

share on:
Classic

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் டைரி விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் பிரசார ஆயுதமாக எடுத்துள்ளனர்.

தமிழக அரசியல் களத்தையே புரட்டிப்போட்டது குட்கா ஊழல் வழக்கு. இதன் வழக்கின் பிரதானக் காரணமாக ஒரு டைரிதான் இருந்தது. இந்த டைரியை மையமாக வைத்து தமிழக அமைச்சர்கள் முதல் காவல் துறை உயர் அதிகாரி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேபோல் கர்நாடகத்திலும் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய டைரி ஒன்று அம்மாநில அரசியல் களத்தை புரட்டிப் போட்டு வருகிறது. கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மாநில தலைவருமான எடியூரப்பா வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த டைரியில் ரூ. 18,000 கோடி வரை பாஜக முக்கிய தலைவர்களுக்கு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பெயர்களும் இந்த டைரியில் இடம்பெற்றிருந்தது.

தற்போது இந்த விவகாரத்தையே பிரசார ஆயுதமாக காங்கிரஸ் கட்சியினர் எடுத்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் பிரசாரக் கூட்டம் அனைத்திலும் எடியூரப்பாவையும், கைப்பற்றப்பட்ட டைரியும் குறித்த லோக்பால் விசாரிக்க வேண்டும் என்றும் லோக்பாலின் முதல்வழக்கு இதுவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலியான குற்றச்சாட்டுகள் மூலம் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற முயலுகின்றனர் என எடியூரப்பா மறுப்பு தெரிவித்து வருகிறார்.

News Counter: 
100
Loading...

Ragavan