3 வாரங்களுக்கு பிறகு அமைச்சரவையை விரிவு செய்த எடியூரப்பா : 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..

share on:
Classic

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்று மூன்று மாதங்களுக்கு பிறகு, இன்று அம்மாநிலத்தின் கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கவிழ்ந்த பிறகு அம்மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 20 நாட்களாக தனிநபர் அமைச்சரவையை நடத்தி வந்த அவர், 3 வாரங்களுக்கு பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து அதற்கான அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதன்படி இன்று 10.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்களான கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் ஆர். அசோகா உட்பட 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சுயேட்சை எம்.எல்.ஏக்களான, ஹெச். நாகேஷ் மற்றும் லக்‌ஷன் சங்கப்பா சாவடி ஆகியோரும், கோவிந்த் எம். கரோஜல், அஷ்வத நாராயண் சி.என், பி. ஸ்ரீ ராம்லு, எஸ். சுரேஷ் குமார், வி. சோமன்னா, சி.டி. ரவி, பசவா ராஜ் பொம்மை, ஜே.சி. மது சுவாமி, சி.சி. பாட்டீல், பிரபு சௌகான் ஆகியோர் பதவியேற்றனர். மேலும் சசிகலா ஜோலே என்ற ஒரே ஒரு பெண் அமைச்சரும் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

முன்னதாக அமைச்சரவை விரிவாக்கத்தின் தாமதம் குறித்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டி வந்தன. காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இது குறித்து பேசிய போது “ கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கூட அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லை. இது ஜனநாயகாமா..? அல்லது சர்வாதிகாரமா..? என்று டிவிட்டரில் பதிவிட்டார். மேலும் எடியூரப்பா தான் முதலமைச்சராக வேண்டும் என்று காட்டிய தீவிரத்தை, ஏன் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய காட்டவில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வறட்சியாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya