வாக்களர்களுக்கு நேற்று இரவே மை வைத்த பாஜகவினர் : தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

share on:
Classic

உத்தரபிரதேசத்தில் பாஜகவினர்கள் நேற்று இரவே வாக்காளர்களுக்கு மை வைத்து சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் சந்தௌலி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நேற்று இரவு சில மர்மநபர்கள் கையில் 500 ரூபாய் கொடுத்துவிட்டு விரலில் மை வைத்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், நேற்றிரவு மூன்று பேர் தங்களது கிராமத்திற்கு வந்தனர் எனவும் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தலா 500 ரூபாய் கொடுத்துவிட்டு, விரலில் கட்டாயப்படுத்தி மை வைத்ததாகவும் தெரிவித்தனர். இதனால் தற்போது தங்களால் வாக்களிக்க முடியவில்லை என புகார் தெரிவித்ததோடு, தங்களுக்கு வாக்களிக்க வழிவகை செய்யவேண்டும் எனவும், வாக்குக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையருக்கு புகார் அளித்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth