நயன்தாராவை ஷேர் ஆட்டோவில் போகச் சொல்லும் யோகிபாபு..!!

share on:
Classic

இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதன் முறையாக இரட்டை வேடத்திடல் நடித்திருக்கும் படம் “ஐரா”.  

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு,  என பலர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த ஐரா படத்தின் பாடல்கள்  மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஐரா படம் வரும் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் கே.ஜே,ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில்  நயன்தாரா, யோகிபாபு இருவரும் ஓட்டப்பந்தையத்திற்கு தயாராவது போன்ற ஒரு புகைப்படம்  வெளியிட்டு, அதில் யோகி பாபு “நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே” என நயன்தாராவிடம் சொல்வது போல ஒரு போஸ்ட் போட்டுள்ளனர்.  

இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் இந்த டுவிட்டை யை வைரலாக்குனது மட்டுமில்லாமல்  லேடி சூப்பர் ஸ்டாரையே நம்ம யோகி பாபு கலாய்க்கிறார் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan