“இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கலாம்” - ஏமாற்றத்தில் வெளியூர்வாசிகள்..!!

share on:
Classic

இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அது போலியான செய்தி என்பதால் வெளியூர்வாசிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வாக்களிக்க சொந்த ஊருக்கு போகவேண்டும் என்கிற அவசியமில்லை. இனி நாம் எங்கிருக்கின்றோமோ அங்கேயே வாக்களிக்கமுடியும் அதற்கு இண்டர்னெட்டில் nvsp.in என்ற இனையதளத்தில் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள் என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. அதனை நம்பி இருந்த இடத்திலேயே வாக்களித்துவிடலாம் என்று நம்பிய பலர் வாக்களிக்க முடியாமல் வெளியூர் வாசிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கேள்வி எழுப்பிய போது, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்க மார்ச் 16 வரை காலக்கெடு வழங்கப்பட்டதாகவும், அதற்கு முன்னதாக பதிவிறக்கம் செய்திருந்தால் மட்டுமே அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் தற்போது அந்த படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்தால் இந்த தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது எனவும், அடுத்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். 

 

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan