இந்தியாவே உற்று நோக்கும் கலைஞனை அவமதித்துவிட்டீர்கள் - நீதிபதி கிருபாகரன்

share on:
Classic

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்தியாவே உற்று நோக்கும் கலைஞனை அவமதித்துவிட்டீர்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம் அவரை அவமதித்து விட்டதாக தெரிவித்தார். மேலும், கடைசி  நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க மறுப்பு தெரிவித்தார். தயாரிப்பாளர் சதீஷ்குமார் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இளையராஜா 75 நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும்  தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind