வருடத்திற்கு ரூ. 70 லட்சம் சம்பாதிக்கும் இளம் 'ஹேக்கர்'..!

Classic

வாரத்திற்கு வெறும் 20 மணி நேரங்களே வேலை செய்யும் இளைஞர் தன் 'ஹேக்கிங்' திறமையால் பல லட்சங்களை அள்ளி குவித்து வருகிறார். 

தகவல்களை திருட சொல்லும் நிறுவனங்கள்:
சாம் என்ற இளைஞர் ஹேக்கிங்கில் கில்லாடியாக திகழ்கிறார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் இவர் தகவல்களை சமூக விரோதமாக திருடும் ஹேக்கர் இல்லை. மாறாக, பல கம்பெனிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் தகவலைகளை சாமிடம் திருட சொல்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?... 

சாமின் வேலை:
எந்த அளவு பாதுகாப்பு நிறைந்த தளங்களுக்குள்ளும் புகுந்து விடுவார் சாம். தங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றதா என அறிந்துகொள்ள விரும்பும் நிறுவனங்கள், இவரிடம் வந்து தங்கள் தகவல்களை திருட முடிகிறதா? என்று பார்க்க சொல்கின்றன. அப்படி முடிகிறது என்றால், இன்னும் பாதுகாத்து பலப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். 

ஹாக்கர் சாம் கூறுகிறார்:
"11 வயதிலிருந்தே எனக்கு ஹேக்கிங் தெரியும். ஒரு நாளுக்கு 15 மணி நேரங்களுக்கு மேல் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பேன். ஆனால் இன்றோ என் வாழ்க்கையே மாறி விட்டது. வீட்டிலிருந்தே இந்த அளவு சம்பாதிப்பது என்பது பெரிய விஷயம் தான் என்று நினைக்கிறேன். இது வெறும் ஆரம்பம்" என்கிறார் சாம். நவீன தொழில்நுட்ப யுகத்தில் அறிவை விசாலப்படுத்தி இறங்கி உழைத்தால் சம்பாத்தியம் நிச்சயம் என்பதற்கு சாம் ஓர் ஆகச்சிறந்த உதாரணம். 

News Counter: 
100
Loading...

aravind