பெண்ணை ஏமாற்றி ஆபாசபடம் எடுத்து மிரட்டிய இளைஞர் : போலீஸார் கைது செய்து விசாரணை..

share on:
Classic

கொடைக்கானலில் பெண்ணிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆபாசம் படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் தங்களை எப்படி பாதுகாப்பது என்ற விழிப்புணர்வு இருந்தாலும், பெண்களை ஏமாற்றுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரங்கேறியுள்ளது. அங்கு எலெக்டிரிகல் கடை நடத்தி வருபவர் சிவக்குமார். இவர் தனது கடை அருகில் பணிபுரிந்து வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தராவிட்டால் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வேன் என மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சிவக்குமார் கைது செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

News Counter: 
100
Loading...

Ramya