உங்கள் வாக்கு இந்தியாவை வடிவமைக்கும் : 7-ம் கட்ட தேர்தலில் அனைவரும் வாக்களிக்க பிரதமர் வலியுறுத்தல்..

share on:
Classic

இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தியுள்ள பிரதமர், உங்கள் வாக்கு இந்தியாவை வடிவமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ 2019 ஆண்டுக்கான மக்களவை தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து, வாக்கு சதவீதத்தில் சாதனை படைக்க வேண்டும். உங்களின் வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைக்கும். முதன்முறை வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மோடி உட்பட களத்தில் உள்ள 918 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் போகும் 10.01 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற 1.12 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ramya