வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது..!

share on:
Classic

மதுரை ஆத்திகுளம் பகுதியில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐலாண்ட் நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தல்லாகுளம் பகுதியில் விற்பனை செய்துவந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவரை கைது செய்த போலீசார், சந்தோஷின் வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடியை அகற்றி அழித்தனர்.

சந்தோஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு கஞ்சா குடித்து வந்ததும், தமது தேவைக்காக வீட்டுத் தொட்டத்திலேயே கஞ்சா செடி வளர்த்தும், மீதியை, விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravindh