7 வயதில் 154 கோடி சம்பாதிக்கும் சிறுவன்... எப்படி தெரியுமா..?

share on:
Classic

சிறுவர்களின் பொம்மைகள் குறித்து  விமர்சனம் செய்து சமூக வலைதளமான யூ-டியூப் சேனலில் உலகிலேயே அதிகம் சம்பாதித்து சாதனை செய்திருக்காரு சிறுவன் ராயன். 

நம்ம சிறு வயசுல என்ன பண்ணோம்

நம்ம எல்லாம் 7 வயசுல என்ன பண்ணிட்டு இருந்திருப்போம், யோசிச்சு பார்த்தா என்ன நினைவுக்கு வருது..?  ஃபெரண்சோட ஊர் சுத்தனது, கோலி விளையாடுனது, பம்பரம் விளையாடுனது, போகோ பாத்தது எல்லாம் தான் நியாபகத்துக்கு வருது. வேர என்ன பெருசா பண்ணி இருக்கபோறோம்.. ஆனா 7 வயசு குட்டி சிறுவன் ராயன் என்ன பன்றாரு தெரியுமா..? சரி வாங்க என்ன பன்றாரு பாப்போம். 
 

சிறுவன் ராயன் யு டியூப் சேனல்

ராயனோட சொந்த ஊரு அமெரிக்கா. 2015-ல் இவருக்கு 4 வயசு இருக்கும் போது ’ரயான் டாய்ஸ் ரிவியூ'(Ryan Toys Review ) என்ற, 'யூ டியூப் சேனல்' துவங்கப்பட்டது. அந்த சேனல்ல குழந்தைகள், சிறுவர்களோட பொம்மைகள் குறித்து விமர்சனம் வழங்கி வருகிறார் ராயன்.  இவரு வழங்கும் விமர்சனம் பலரையும் கவர்ந்ததால ஏகப்பட்ட பொருட்கள்  ஹிட் அடித்தது. இப்போ அந்த சேனலுக்கு உலக அளவில் 1.7 கோடி சந்தாதாரர்கள் (Followers ) இருக்காங்க. 

 

154 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ராயன்

இந்நிலையில், சர்வதேச சமூக வளைத்தளமான Youtube-மூலம் அதிகமாக சம்பாதிப்பாவர்கள் குறித்து அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டாங்க.அந்த செய்தியில் கடந்த 2018-ல நம்ம ராயன் 154 கோடி ரூபாய் சம்பாதித்து முதல் இடத்த பிடித்து சாதனை படைத்திருக்கிறார் ராயன்.

 

ராயனை கவுரவித்த வால்மார்ட்

ராயன் விமர்சனம் செய்து வெளியிடும் வீடியோ-க்கள் 2,600 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன.  ராயனை கவுரவிக்கும் விதமாக ’வால்மார்ட்' நிறுவனம் ’ராயன் வோல்டு’என்ற பொம்மைகள், துணிகளை விற்பனை தனி பிரிவை துவங்கி இருக்கு. அதனால நிறுவனத்தில் வருவாயும் அதிகமாகியிருக்குனு நிறுவனமே கூறியிருக்கு.

 

 

News Counter: 
100
Loading...

aravind