'பண்ட்-ஐ' புகழ்ந்து தள்ளிய யுவராஜ் சிங்..!!

Classic

அடுத்த உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று நம்பிக்கை அளித்த யுவராஜ் சிங், டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட்-ஐ புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ்:

37 வயதாகும் யுவராஜ் சிங்கை 'T20' தொடருக்கு ஒரு கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. உடல் நிலை காரணமாக கடந்த சில காலமாக சரியாக விளையாட முடியாமல் இருந்த யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வராத நிலையில், இரண்டு முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தேர்வு செய்தது .எனவே தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் யுவராஜ்.

பண்ட்-ற்கு யுவராஜின் புகழாரம்:

தற்போது 'Grade B' ராஞ்சி கோப்பையில் விளையாடி கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் "இந்த தொடரில் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சராசரியாக இருந்தபோதிலும். சிறப்ப முயற்சி செய்தனர்.இந்த தொடரில் என்னை மிகவும் ஈர்த்தவர் பண்ட் தான். கண்டிப்பாக அவர் நீண்டக்காலம் இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன். அவர் திறமை தனித்துவமானது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இளைஞர் இந்த அளவிற்கு சிறப்பாக பேட்டிங் செய்வதை இப்போது தான் பார்க்கிறேன்" என்று  புகழாரம் சூட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind