சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்..!

share on:
Classic

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். 

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் கடந்த 2000ம் ஆண்டில் இணைந்தார். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் யுவராஜுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, புற்றுநோயில் இருந்த மீண்டு வந்த அவர் கடந்த 2016ம் ஆண்டில் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கினார். ஆனால் அவரால் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.  

இந்தநிலையில்,  நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஊடகங்களுக்கு யுவராஜ் அழைப்பு விடுத்திருந்தார். அதில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிரிக்கெட் தனக்கு போராட கற்றுக்கொடுத்ததாகவும் கூறினார். இந்நாள் வரை யுவராஜ் சிங் 40 டெஸ்ட், 304 ஒரு நாள் மற்றும் 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind