வட இந்தியாவில் நிலநடுக்கம்: நள்ளிரவில் பீதியில் உறைந்த மக்கள்

வட இந்தியாவில் நிலநடுக்கம்: நள்ளிரவில் பீதியில் உறைந்த மக்கள்

வட மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் நேற்று (மார்ச் 22) இரவு 10.22 மணிக்கு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது.

காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டது எங்கே?

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை சுற்றி உள்ள பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எங்கெங்கு உணரப்பட்டது?

துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வட மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தில்இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.