இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. வேலை தேடும் கம்பெனியிலேயே.. ஊழியர்களுக்கு வேலை காலி!

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. வேலை தேடும் கம்பெனியிலேயே.. ஊழியர்களுக்கு வேலை காலி!

பிரபல வேலைதேடும் தளமான Indeed அதன் நிறுவனத்தில் 15% ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் வேலை தேடும் தளமான Indeed நிறுவனம் அதன் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ் ஹைம்ஸின் அடிப்படை ஊதியத்தில் 25% குறைக்கபடும் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சார்ந்த துறையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், பேஸ்புக் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் இதில் அடங்கும்.

செலவுகளைக் குறைக்கும் வகையில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

வேலை பறிபோனால் எல்லாரும் வேலை தேட nakuri, Indeed, LinkedIn தளங்களுக்குச் சென்றுதான் வேலை தேடுவார்கள். ஆனால் லிங்க்ட்-இன் நிறுவனமும் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து இண்டீட் நிறுவனமும் அதன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் செய்தியை அறிவித்துள்ளது.

இது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமில்லாலம் அனைவரின் மத்தியிலும் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. இண்டீட் நிறுவனம் நிதி நெருக்கடியில் இருப்பதால் அதனை சமாளிக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.